கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!

April 1, 2017


ஜெமினி சினிமாவில் பொறுப்பாசிரியராக பணியாற்றி அதன்பின் சினிமா மக்கள் தொடர்பாளராக ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த தெனாலி, அஜித் நடித்த ஆழ்வார் முதல் சுமார் 150 படங்களுக்கு மேல் பணியாற்றி புகழ்பெற்றவர் பி.டி.செல்வக்குமார்.

குறிப்பாக இளையதளபதி விஜய்யின் வளர்ச்சியில் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எந்தளவு பங்கு இருக்கிறதோ அதேபோல் விஜய்யின் வளர்ச்சியில் பக்கபலமாக இருந்தவர் பி.டி.செல்வக்குமார். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், விஜய்யின் மக்கள் தொடர்பாளராக அவருடைய ஆரம்ப காலத்தில் இருந்தே பணியாற்றியுள்ளார்.


pt selvakumar
Puli Producer


இவருடைய அபார உழைப்பையும் நேர்மையையும் பார்த்த விஜய், இவருக்கு புலி படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கினார். விஜய் மட்டுமல்லாது தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, ஏ.வி.எம் பாலசுப்பிரமணியம், விஜயா புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இவர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இன்றும் விஜய்யுடன் குடும்ப நண்பரை போல ஒரு நல்ல உறவில் இருக்கிறார்.

காவலன், வாலு, வெடி என இன்னும் எண்ணிலடங்கா பல படங்களை இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீட்டு திரைக்கு கொண்டுவந்ததில் இவருடைய பங்கு மிகமுக்கியமானது. வாலு படம் வெளியானது செல்வக்குமாரால்தான் என டி.ஆரே பல மேடைகளில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.


PT Selvakumar


எப்போதும் பம்பரம் போல சுழன்றிக் கொண்டே இருக்கும் இவர், இம்மாதம் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கே.ஆர். தலைமையிலான அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பதவியில் இல்லாத நேரத்திலேயே சின்ன படம் பெரிய படம் என பாகுபாடு பார்க்காமல் பல படங்கள் வெளிவர உதவியாக இருந்தவர் அதை துணைத்தலைவர் பதவியுடன் இதே நேர்மையோடு வருங்காலங்களிலும் தொடரவேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.

25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக பணியாற்றியுள்ள இவர்மீது இதுவரை எந்தவித குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. எல்லோருடனும் நட்புறவில் இருக்கும் இவர், இந்த பதவிக்கு 100% தகுதியானவர் என்பதால் இவருக்கு அதிகளவில் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு இவருக்கு பெருமளவில் பெருகியுள்ளது.

மேலும் நடந்து முடிந்திருக்கும் கருத்துக்கணிப்பிலும் துணைத்தலைவர் பதவியில் இவர்தான் வெற்றிபெறுவார் எனவும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

Latest