முதல் முறையாக கட்ச தீவை படம் பிடித்த இளம் தமிழ் இளைஞர்கள்.!

February 15, 2018


இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் இடமாக விளங்கி வருவது கட்சத் தீவு, இது முதலில் தமிழர்களின் இடமாக இருந்தது, பின்னர் இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கை அதிபர் சிறிசேனவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தால் இந்த பகுதி இலங்கைக்கு விட்டு கொடுக்கப்பட்டது.


kc tweet
இதனால் தமிழக மீனவர்களுக்கு அன்று ஆரம்பித்த சோதனை காலம் தான் இன்று வரை ஓயவில்லை, இதுவரை இந்த கட்ச தீவை எந்தவொரு தமிழரும் நெருங்க முடிந்ததில்லை, நெருங்கிய மீனவர்களும் பாதுகாப்புடன் திரும்பியதில்லை என்பது தினமும் வெளியாகும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.


எந்தவொரு பத்திரிக்கை நிறுவனங்கள், தொலைக்காட்சிகள் என யாராலும் நெருங்க முடியாத இந்த கட்ச தீவை முதல் முறையாக மீனவர்களுடன் தமிழக இளைஞர்கள் படம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.


ஆம், இதுவரை 17 குறும்படங்களை இயக்கி இருப்பவர் பா.அய்யனார், இவரும் இவருடைய குழுவும் சேர்ந்து கடலில் தமிழக மற்றும் இலங்கையை பிரிக்கும் எல்லைப் பகுதியில் இருந்து கட்ச தீவை புகைப்படம் எடுத்துள்ளனர், மேலும் இந்த புகைப்படங்களை மீனவர்களின் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள குறும்படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் இவர்களின் குழு எடுத்த அனைத்து குறும்படங்களும் சாதாரண கேமரா, செல்பேசி கேமரா ஆகியவற்றால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறும்படம் எடுக்க முயற்சி செய்யும் இளைஞர்கள் கேமராவிற்காக காத்திருக்காமல் நம்மிடம் இருக்கும் கருவிகளை கொண்டே தரமான குறும்படங்களை கொடுக்கலாம் என்பதே இவர்களின் நோக்கமாகும்.
Latest