போடா போய் போஸ்டர் அடிடா.. விஜய் சேதுபதியின் ஜூங்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

July 12, 2018


தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக விளங்கி வரும் விஜய் சேதுபதி வருடத்தில் பல படங்களை கொடுத்து வருகிறார், அதிலும் அனைத்தையும் வெற்றி படமாக கொடுத்து வருகிறார். இதனால் விஜய் சேதிபதியின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.


vijay sethupathy
விஜய் சேதிபதி, சாயிஷா நடிப்பில் கோகுல் இயக்க விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஜூங்கா. காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முழுக்க முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றில் மூலம் விஜய் சேதுபதி போடா போய் போஸ்டர் அடி ஜூங்கா வரும் ஜூலை 27-ம் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். மேலும் இதே நாளில் ஆர்யா நடிப்பில் ஜெயக்குமார் இயக்கியுள்ள கஜினிகாந்த் படம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


vijay sethupathyLatest