இணையதளத்தில் கேர்ள் பிரண்ட்டை விற்க முயன்ற காதலன்!!

October 9, 2018


இன்றைய காலகட்டத்தில், நம் அன்றாட வாழ்வில் , மனிதர்களை தவிர அனைத்து பொருட்களையும், நாம் ஆன்லைன் சந்தையில் விற்க வாங்க செய்கிறோம். சமூக வலைதளத்திற்கு அடுத்து நாம் அன்றாடம் பயன்படுத்துவது , இணைய வணிக முறை தான். செல்போன் - இல் துவங்கி மளிகை சாமானில் இருந்து அனைத்தும் இணைய வணிக சேவையில் கிடைக்கின்றன.


e bay
ஆனால், வெளிநாட்டு இளைஞர் ஒருவரோ, தன் காதலியை ஆன்லைனில் விற்க முற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேல் லீக்ஸ், தன் காதலி கெல்லியுடன் ஏற்பட்ட சின்ன சண்டையில் , காதலியை பழிவாங்கும் நோக்கில், ஒரு விபரீதமான செயலை செய்து இருக்கிறார்.


கடந்த செப்.29 ஆம் தேதி தன் காதலியின் புகைப்படத்தை, ebay இணைய வணிக நிறுவனத்தின் தளத்தில், பதிவிட்டு 'girl friend for sale' என்று விளம்பரம் கொடுத்துள்ளார். கெல்லியின் புகைப்படத்துக்கு கீழ் அவரை மோசமாக விவரித்து டிஸ்கிரிப்ஷனும் கொடுத்துள்ளார்.


e bay

இவ்வாறு பதிவிட்ட சில மணி நேரத்தில் இ-பே தளம், " இங்கு மனித உறுப்புகளை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது" என எச்சரித்து, கெல்லியின் புகைப்படத்தை நீக்கியது.

இவை அனைத்தும் நடைபெறுவதற்குள், கெல்லி விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர், மேலும் ஏலத்தின் மதிப்பு, ரூ. 67 லட்சம் ரூபாய் சென்றுவிட்டது. ஆனால், அன்றே கெல்லியும், லியிக்சும் சண்டையில் இருந்து சமாதானம் ஆகி விட்டனர். லீக்ஸ் இதைப்பற்றி கெல்லியிடம் கூறும்போது, அதை கெல்லி ஜாலியாக எடுத்து கொண்டாலும் இனி இவ்வாறு செய்யகூடாது என எச்சரித்தார்.
Latest