சூர்யாவை இயக்க தயாராகும் கார்த்தி - விரைவில் அறிவிப்பு?

July 12, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும் உடன் பிறந்த சகோதரர்களாக விளங்கி வருபவர் சூர்யா மற்றும் கார்த்தி. இருவருமே தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருக்கிறார்கள். தற்போது முதல் முறையாக பாண்டியராஜ் இயக்கியுள்ள கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் மூலம் சூரியாவும் கார்த்தியும் இணைந்துள்ளனர்.


kadaikutty singam
சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி முதல் முறையாக நடித்துள்ளார். இந்த படம் நாளை ( ஜூலை 13 ) உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. விவசாயத்தை பற்றிய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்நிலையில் படத்தை பற்றி கார்த்தி அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவுக்கு கதை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் விரைவில் சூர்யாவை இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவும் தயாராக இருப்பதாக கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


kadaikutty singamLatest